இன்று மக்கள் வரிசைகளில் நின்று மரணிக்கும் நிலைக்கு நாடு வந்து விட்டதாகவும், இல்லை, இயலாது மற்றும் பார்க்கலாம் என சொல்லுவதற்கு அரசாங்கமொன்று தேவையில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ளாத ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து தெரிவித்தார்.
மேலும் நிலையற்ற தீர்வுகளால் நாடு முன்னேறாது எனவும் மக்கள் ஆணையின் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வே, ஒரே தீர்வு எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.