அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் விரக்தியின் காரணமாக எதிர்ப்பில் ஈடுபட்டதனால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு வலுப்பெற்றதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அதனையடுத்து பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மோதலில் 06 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.