இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பயன்படுத்தி பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் தனியார் மற்றும் சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு, விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கவும், தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள எரிவாயு இருப்புக்களை முறையாக விநியோகிப்பது மற்றும் போதுமான எரிவாயு இருப்புக்களை விரைவாக கொள்வனவு செய்வது குறித்தும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.