follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுநாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாது! மக்கள் பயப்பட வேண்டாம்! - கமத்தொழில் அமைச்சர்

நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாது! மக்கள் பயப்பட வேண்டாம்! – கமத்தொழில் அமைச்சர்

Published on

தற்பொழுது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் பஞ்சம் ஏற்படாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த அமைச்சர் வழமையாக ஒருமாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆக, தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய சுப்பர் மார்க்கெட்களில் அரிசியினை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன் 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போது அது 470,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மக்கள் வீணாக அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு...

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல்...