follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடு2 கோடி பெறுமதி வாய்ந்த அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டன!

2 கோடி பெறுமதி வாய்ந்த அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டன!

Published on

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் ஆப்பிள் பழ தொகையினை அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாததன் காரணமாக அது தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆப்பிள் கொள்கலன்களை அதனை இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து குறித்த சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்தே இவற்றை மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இது போன்று இன்னும் பல பொருட்களை அவை வீணாக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதனை பிரயோசனமான ஒரு விடயத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் துறைமுக அதிகாரிகளுக்கு இதன்பொழுது பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட அப்பிள் பழங்கள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை...

அம்பாறையில் உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்...

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனவரி 2020 முதல்...