follow the truth

follow the truth

December, 2, 2024
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

இந்தியாவிலிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்

Published on

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவை இந்தியாவின் தேவைக்காக ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

எனினும், இலங்கை விவசாயிகள் எதிர்நோக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உரத் தொகை கிடைத்ததும் அவற்றை உடனடியாக 2, 3 நாட்களுக்குள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிறுபோகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு பொதி யூரியா உரத்தை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி அமைச்சுக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது...

ஐஸ் போதைப்பொருள் 400 கிலோவுடன் பிடிபட்ட சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

அண்மையில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறித்த மூன்று வினாக்களுக்கு மாணவர்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவதால்...