இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து, இலங்கையை துடுப்பாட அழைத்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஜியே ரிச்சர்ட்சன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.
துடுப்பாட்டத்தில் ஆரோன் பின்ச் 24 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.