இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 3 இருபதுக்கு20 போட்டிகளும், 5 ஒருநாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இதில், முதலாவது இருபதுக்கு20 போட்டி நேற்று ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டியை காண பெருமளவான ரசிகர்கள் குவிந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்றைய தினம் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 3 ஆவது இருபதுக்கு20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை பல்லேகலையில் இடம்பெறவுள்ள நிலையில், அதற்குரிய அனைத்து அனுமதி சீட்டுகளும், 2 ஆவது போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே விற்று தீர்ந்துள்ளன.