சிங்கள பௌத்த இனம் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்த கஜேந்திரன், நாட்டு மக்கள் பட்டினியால் சாவடைந்தாலும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை படையினர் இன்னும் கைவிடவில்லை என்றும் குறிப்பிட்டார்
இதேவேளை வடக்கில் நிதி நிறுவனம் ஒன்று பொதுமக்களுக்கு பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை மீட்கப்போவதாக வாய்கிழிய பேசும் ரணில் விக்கிரமசிங்க, கடுமையான பொருளாதாரம் காரணமாக பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.