follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியின் சமுத்திர தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் சமுத்திர தின வாழ்த்துச் செய்தி

Published on

இன்று உலக சமுத்திர தினம்.  இம்முறை அதன் கருப்பொருள், புத்துயிரளித்தல்: சமுத்திரத்திற்கான கூட்டு நடவடிக்கை,(Revitalization: Collective Action for the Ocean.) சமுத்திரமானது  பல்லுயிர் வளம் மிகுந்த சுற்றுச்சூழல் அமைப்பு கொண்ட இயற்கையின் தனித்துவமான படைப்பு.

அதிலிருந்து நாம் மீன் மட்டும் பிடிப்பதல்ல, மாறாக கடல்கள் பூமியின் ஆக்ஸிஜன் தேவைகளில் 50% ஐ வழங்குகின்றன, வண்ணமயமான மீன்கள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு உயிர் வழங்குகின்றன, மேலும் உலகின் பொருள் போக்குவரத்தில் 80% கடலின் மூலமே நடைபெறுகிறது.  அது மட்டும் அல்ல;  மனிதர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் கடல்கள் வழங்குகின்றன.

இலங்கையானது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய, அழகான தீவு.  நான்கு பக்கங்களிலுமுள்ள  கடலால் அதன் அழகு மேலும் அதிகரிக்கிறது.  இதனால் வெளிநாட்டினரின் ஈர்ப்புக்கு சற்றும் குறையாமல் நம் நாடு இருந்தாலும் சிலரது தன்னிச்சையான செயல்களால் அந்த பெருங்கடல் அழிவை நோக்கி செல்ல ஆரம்பித்திருப்பது வருந்தத்தக்கது.

எனவே கடலை அழியாமல் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.  அப்போதுதான் பூமியின் எதிர்காலமும் நம் அனைவரின் வாழ்க்கையும் பாதுகாப்பாக இருக்கும்.சுற்றுச்சூழலைப் பாதுகாத்து உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமையட்டும்!  உலக சமுத்திர தினத்தில்  நான் வேண்டுகிறேன்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...