follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஉணவுப்பயிர்களை பயிர்களை பயிரிட உடனடி வேலைத்திட்டம்! ஜனாதிபதி தீவிரம்!

உணவுப்பயிர்களை பயிர்களை பயிரிட உடனடி வேலைத்திட்டம்! ஜனாதிபதி தீவிரம்!

Published on

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, எனினும் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜி தர்மகீர்த்தி மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத்தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே...

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...

கோழி இறைச்சிக்கான விலை ரூ.150 இனால் குறைவு

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின்...