follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது! வைத்தியர் தீபால் பெரேரா

குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது! வைத்தியர் தீபால் பெரேரா

Published on

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையின்போது குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் , புரதம் உள்ளிட்ட மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் போதாமை கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த வைத்தியர் ச்சீஸ், பட்டர் போன்றவற்றை விட பால், முட்டை, சோறு மற்றும் பச்சை கீரைகளை உணவில் சேர்க்குமாறும், மஞ்சள் காய்கறிகளை பெற்றுக் கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணித் தாய்மார்களும் தங்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...