follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஜனாதிபதிக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது! - செந்தில் தொண்டமான்

ஜனாதிபதிக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது! – செந்தில் தொண்டமான்

Published on

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது திருத்தச்சட்ட அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் நீதி அமைச்சரிடம் அரசியல் கட்சிகளினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் போது இ.தொ. கா சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் நீக்குவது தொடர்பாகவும் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது என்றும், பாராளுமன்ற அனுமதியுடனே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

அதற்கு நீதி அமைச்சர் சாதகமாக பதிலளித்ததுடன், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் 21வது திருத்தச்சட்ட அமுலாக்கம் சமர்பிக்கப்படும் என பதிலளித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம்...

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...