follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுநாளை 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகம்

நாளை 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகம்

Published on

நாளைய தினமும் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், 3,950 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய குறித்த கப்பல் கடந்த வார இறுதியில் நாட்டை வந்தடைந்த நிலையில் அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில், நேற்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி

இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ...

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது. இந்த...