அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி, 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000/= ரூபா விசேட கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளுக்கமைவாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பள அதிகரிப்பை வரவு செலவுத்திட்டத்தினூடாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.