நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை குடியுரிமை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில் 21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.
ஜே.வீ.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மீது நம்பிக்கை வைப்பது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 21 ஆம் திருத்தசட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் கூடவுள்ளது.
21 ஆம் சட்டமூலம் மீது நம்பிக்கை வைப்பது பிரச்சினைக்குரிய விடயம் – விஜித ஹேரத்
Published on