கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
காணாமல்போனோரின் குடும்பத்தினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, காஷ்மீர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸை (Khurram Parvez) விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கு எதிரான ஆசிய சம்மேளனத்தின் (AFAD) தலைவரான குர்ரம் பர்வேஸ் கடந்த 189 நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.