3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.