பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணியினர் நாடு திரும்பியது.’
பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர், பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் கடைசியுமான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அசித பெர்னாண்டோவும், தொடரின் சிறந்த வீரராக அஞ்சலோ மெத்தியூஸூம் தெரிவாகினர்.