அதி வீரியம் கொண்ட புதிய வைரஸ் திரிபு தொற்று முதன்முதலில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது எனவும், மிக வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது எனவும் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த வைரஸ் முதன் முதலில் கடந்த மே மாதம் கொரோனாவின் மூன்றாவது அலையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீனாவின் வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் – 19 வைரஸை விட இந்த வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.