follow the truth

follow the truth

November, 16, 2024
HomeTOP1IMF இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் - பிரதமர் ரணில்

IMF இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர் ரணில்

Published on

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இயலுமானவரை செலவினத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வருடத்திற்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற எதிர்ப்பார்க்கின்றோம்.

அதேநேரம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளினதும் உதவிகள் பெறப்படவுள்ளன.

கிடைக்கப்பெறும் உதவிகளில், அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், நாட்டின் பணவீக்கமானது 40 சதவீதம் வரை அதிகரிக்கும்.

எவ்வாறாயினும், 2025ம் ஆண்டு வரை  ஒரு சதவீத ஆரம்ப மிகை நிலுவையை அடைவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை தேர்தல் வரலாற்றில் விஜித சாதனை

இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித...

பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் எம்.பிக்கள்

2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) ரியாஸ் பாரூக் - கண்டி...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...