இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய அட்டவணையின் பிரகாரம், மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 4 விமானப் போக்குவரத்து சேவைகளை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
மேலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாரத்திற்கு ஒரு விமான சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய சுற்றுலா பயணிகளை, முழுமையான சுகாதார வழிமுறைகளின் கீழ் அழைத்து வர இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.