பதுளை – ஹாலி எல பகுதியில் 140 லீட்டர் பெட்ரோலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவர பகுதியிலுள்ள வீதித்தடையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
சட்டவிரோதமான முறையில் பெட்ரோலை கொண்டுசென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.