இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மெண்டிஸ் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக டாக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டாக்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இதன்போது களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குசல் மெண்டிஸ்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.