follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

Published on

முக்கிய சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பெண் ஒருவரை கண்டுபிடித்த பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தோன்றிய பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்துள்ளார்.

இதற்கு சம்பந்தப்பட்ட காணொளி காட்சிகள் மூலம் குறித்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 859 4949 அல்லது 071 419 66 09 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொதுமக்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

றமழான் காலத்தில் விசேட விடுமுறை

2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண...

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன்...

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...