follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுகுரங்கம்மை தொடர்பாக மக்கள் பீதியடைய தேவையில்லை - சந்திம ஜீவந்தர

குரங்கம்மை தொடர்பாக மக்கள் பீதியடைய தேவையில்லை – சந்திம ஜீவந்தர

Published on

நாடுகள் பலவற்றில் பரவிச் செல்லும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரை உலகளாவிய ரீதியாக குரங்கம்மை நோய் காரணமாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

தற்போது உலக நாடுகளில் குறைந்த வீரியம் கொண்ட நோயாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.

இலங்கை மக்கள் இது தொடர்பில் தேவையற்ற பீதி அடைய வேண்டாம்.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் மூலமே இந்த நோய் ஏற்படக் கூடும்.

கொவிட்-19 நோயை போன்ற வேகமாக பரவக் கூடிய வல்லமையை இந்த கொண்டிருக்காது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...