follow the truth

follow the truth

November, 16, 2024
Homeஉள்நாடுஅரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

Published on

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியவை சுயாதீன ஆணைக்குழுவாக மாற்றப்படவுள்ளன.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்ததின் நோக்கம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய எம்.பி.க்களுக்கான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பயிலரங்கம்

பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி...

இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான...

“மக்களால் நிராகரிக்கப்பட்ட நான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன்”

மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...