தேசிய விமான சேவையில் ஒரு விமானியாக தான் கடமையாற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ சமீபத்தில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.
அதற்கமைய, ALPGSL என்ற ஒரேயொரு விமானிகள் சங்கம் மாத்திரமே இலங்கையில் இருப்பதாகவும், ஆனால் குறித்த சங்கத்தில் அருந்திக்க பெர்ணான்டோ எம்.பி. விமானியாக செயற்பட்டதற்கான எந்தவொரு தரவுகளும் இல்லையெனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.