அத்தியாவசிய திருத்தப்பணிகளின் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இன்று நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்றிரவு 10 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை, கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் குறைந்த அழுத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.