விசேட கடமைகளுக்கு என மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1,000 பொலிஸார் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின.
இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள 1,000 பொலிஸாரும் மே 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வடக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தும், பொலிஸ் கல்லூரிகளில் இருந்தும் இவ்வாறு பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.