தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலத்தில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏனைய தொழில்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.