வீடுகளிலேயே ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை (Rapid Antigen Test) மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுகொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 2.5 வீதமானவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எனவும் வர மேலும் குறிப்பிட்டுள்ளார்.