சீனாவிலிருந்து மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால் இதுவரை சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 இலட்சமாக அதிகரிக்கும்.
அத்துடன், இம்மாதத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சமாகும் எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.