பல்வேறு அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றுள்ளாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கை பொது நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதிபர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.