கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
கொவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்ததால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நேற்று (26) மற்றொரு வார்டு ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்