காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்றுவரும் மோதல் சம்பவமானது உச்சநிலையை எட்டியுள்ளது.
அரசுக்கு ஆதரவானவர்கள் தற்போது காலிமுகத்திடல் பகுதிக்குள் பிரவேசித்து அங்கு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதியான முறையில் காலிமுகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.