follow the truth

follow the truth

January, 6, 2025
Homeஉள்நாடுஅக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு - பொலிஸாரின் அறிக்கை

அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு – பொலிஸாரின் அறிக்கை

Published on

கல்முனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் வீதித்தடையில் பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு இரண்டு நபர்களுக்கு பணிப்புரை விடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலிஸாரின் கட்டளைகளைப் புறக்கணித்து, தனது மோட்டார் சைக்கிளில் இருந்து ஓட முயன்றுள்ளார் .

இந்த சம்பவத்தை தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பணியில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் தாக்கினர்.

ஏஎஸ்பி மற்றும் பொலிஸ் ஓஐசியும் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலிஸாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்ததையடுத்து, கோபமடைந்த கும்பல் அவருடைய கழுத்தை நெரிக்க முற்பட்டதால், தற்காப்புக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அப்பகுதியில் அமைதியின்மை தணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 8 பொலிஸ் அதிகாரிகள், 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் 2 ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தேடுதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...

வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு...

வட மத்திய மாகாணத்தில் O/L தவணைப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியுள்ளது – பரீட்சை நிறுத்தம்

வடமத்திய மாகாண 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை...