160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம் 210 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, சீனி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் ஒரு கிலோகிராம் சீனியை 105 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முறையற்ற விதத்தில் அதிக இலாபத்தை பெறும் நோக்கில் சீனி விலையை விற்பனையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (30) சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.