பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான கலந்துரையாடலுக்காக பாராளுமன்ற செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியாம்பலா பிட்டிய விலகுவதாக தீர்மானித்துள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலா பிட்டிய இராஜினாமா தொடர்பான அறிவிப்பை விடுப்பதுடன், விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் முன்மொழியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.