ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் இடமளிக்க முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.