பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீதியான அடிப்படையில் உன்னதமான தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் உறுதியும், கொண்ட நாளாக இந்த ரமழான் பண்டிகை அமைய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சமத்துவத்தின் மகத்தான விடயம் இந்த ரமழான் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ரமழான் நோன்பு காலத்தில் பசித்திருப்பவர்களின் பசியைப் புரிந்து கொள்ளவும், அது பற்றி உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டு வாழ்வதற்கும், மனதைக் கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்படுகின்றது.
இந்த சிறந்த வாழ்க்கை முறைகளை ஒரு மாதம் மட்டும் அல்லாமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.