follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉள்நாடுஅலரி மாளிகைக்கு முன்பாக பதற்றம்!

அலரி மாளிகைக்கு முன்பாக பதற்றம்!

Published on

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு இடையூறாக அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் பாரஊர்திகளை அகற்றுவதற்கு கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று முயற்சித்தபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த ​​பஸ் மற்றும் பாரஊர்தி தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முறைப்பாடளிக்க சென்றிருந்தபோது, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பாக தகவல்கள் தமக்கு தெரியாதென கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்ததாக அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.

இந்நிலையில், இன்றுகாலை பேருந்தை பொலிஸார் அகற்றுவதற்கு சென்றிருந்தபோது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது, நடத்தப்பட்ட தாக்குதலினால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்ட பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...