இன்று (29) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த சர்வகட்சி பேச்சு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி சமீபத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பிரதமருடனான சந்திப்பின் போது ஆளுங்கட்சி சார்பாக 109 எம்.பிக்கள் கலந்துக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமருக்கு ஆதரவாக 117 எம்.பிக்களின் ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து, இன்றைய தினம் இடம்பெறவிருந்த சர்வகட்சிகளுடனான சந்திப்பை ஜனாதிபதி திடீரென ஒத்திவைத்துள்ளார்.