இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அவுஸ்திரேலிய ஏ அணி உட்பட, இருபதுக்கு 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான குழாம்களை அவுஸ்திரேலிய கிரிக்கட் அறிவித்துள்ளது.
டெஸ்ட் அணித் தலைவர் பெட் கம்மின்ஸுக்கு, இருபதுக்கு20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமது முதலாவது குழந்தை பிறப்பு காரணமாக, சுழற்பந்து வீச்சாளர் அடம் ஸம்பா இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் அவுஸ்திரேலிய அணி, இலங்கையில் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது.