நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளபோதும், எரிவாயுக்கான வரிசைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.