நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தமது நிலைப்பாட்டை அறியப்படுத்தியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி, அரச தலைவராக செயற்படும் இறுதித் தருணம் வரை, அரசாங்கத்தின் எந்தவித செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்றத்தின் தலையீட்டுடன் விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டு 7 முன்மொழிவுகள் சபாநாயகருக்கு குறித்த கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.