தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தான் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி அனைத்தையும் உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது.
முன்னதாக சர்வதேச நாணய நிதியமும், தனது நிதியுதவியை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியமை, ஆப்கானிஸ்தானுடைய அபிவிருத்தி வாய்ப்புகளில் குறிப்பாக பெண்களுக்கானவற்றில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.