பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.