நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.