ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், Zoom ஊடாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
தேவையான மறுசீரமைப்பு இன்றி சர்தேச நாணய நிதியத்தின் அவசர நிதியுதவிகள் உடனடியாக கிடைக்காது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமையானது, சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல, குறுங்கால மற்றும் இடைக்கால நிதி திட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய அமைப்புகளுடனும் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.